கரூரில்,ஆளுநர் ஆர்.என். ரவி பதவியில் இருந்து விலக வலியுறுத்தி திடீர் ஆர்ப்பாட்டம்.
கரூரில்,ஆளுநர் ஆர்.என். ரவி பதவியில் இருந்து விலக வலியுறுத்தி திடீர் ஆர்ப்பாட்டம்.
கரூரில்,ஆளுநர் ஆர்.என். ரவி பதவியில் இருந்து விலக வலியுறுத்தி திடீர் ஆர்ப்பாட்டம். கரூர் பாராளுமன்ற உறுப்பினராக இரண்டாவது முறையாக வெற்றி பெற்ற ஜோதிமணி வாக்களித்த மக்களுக்கு இன்று கரூரில் நன்றி தெரிவித்தார்.நிகழ்ச்சியை நிறைவில் செய்தியாளர்களை சந்தித்த எம்.பி ஜோதிமணி, தமிழ்நாடு சட்டமன்றத்தை பொறுத்தவரை முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தும், இறுதியாக தேசிய கீதமும் பாடுவதே காலங்காலமாக மரபாக உள்ளது. இந்த மரபை இதுவரை அனைத்து ஆட்சியாளர்களும், கவர்னர்களும் கடைபிடித்து உள்ளனர். ஆனால், தொடர்ச்சியாக கவர்னர் ஆர்.என்.ரவி கடந்தமுரையும் பாதியிலேயே சென்று விட்டார். தற்போதும் ஆளுநர் உரையை முழுமையாக படிக்காமல் சட்டமன்றத்தில் இருந்து பாதியிலேயே சென்றுள்ளார். இது சட்டமன்றத்தை மட்டுமல்ல, தமிழக அரசை மட்டுமல்ல, தமிழக மக்களையும் அவமதிக்கும் செயல். ஆளுநருக்கு உரிய மாண்போடு அவர் இல்லை என்பதை வருத்தத்துடன் பதிவு செய்து கொள்கிறேன். தமிழக மக்களின் நலன்தான் எங்களுக்கு முக்கியம். ஆளுநரின் வசதிக்கு தகுந்தாற்போல் அனைத்தையும் மாற்ற முடியாது. இன்று தேசிய கீதத்தை முதலில் பாட வேண்டும் என்று கூறும் அவர், நாளை ஆளுநர் உரையை இந்தியில் தயாரித்து கொடுத்தால் தான் படிப்பேன் என்று கூறுவார். ஆளுநர் வைத்த சட்டங்களுக்கு எல்லாம் தமிழ்நாடு அரசாங்கம் ஆட முடியாது. தமிழக அரசையும், முதல்வரையும் அவமதிப்பதை ஆளுநர் கைவிட வேண்டும். தமிழக அரசை மதிக்காத ஆளுநர் அந்த பதவியில் இருந்து விலக வேண்டும் என்பதுதான் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு என்று கூறிவிட்டு, திடீரென பதவி விலக கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.