தனியார் பள்ளியில் முப்பெரும் நடைபெற்றது

தனியார் பள்ளியில் முப்பெரு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. பலர் பங்கேற்றனர்

Update: 2025-01-08 13:51 GMT
ஈரோடு பள்ளிபாளையம் சாலையில் அமைந்துள்ள, நந்தி மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் பாரதிதாசன் தமிழ் இலக்கிய மன்ற விழா, தன்னம்பிக்கை உரை ,நந்தி அறிவியல் கண்காட்சி பரிசளிப்பு விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. பள்ளியின் செயலாளர் சி. நந்தி மோகன்,, பள்ளி முதல்வர் . இ.ராஜேஷ் மற்றும் சிறப்பு விருந்தினர் பட்டிமன்ற புகழ் .தமிழ் நெஞ்சன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தனர். பள்ளியின் முதல்வர் இ. ராஜேஷ் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். பள்ளியின் செயலர் . நந்தி .சி. மோகன் அவர்கள் அறிமுக உரை வழங்கினார். தன்னம்பிக்கை மற்றும் தனித் திறனில் சிறந்து விளங்க சிறப்பு விருந்தினர் பன்முக நோக்கில் உத்வேக கருத்துக்களை மாணவருக்கு வழங்கினார். அறிவியல் கண்காட்சியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை தமிழ் ஆசிரியர்கள் செய்தனர். ஒன்பதாம் வகுப்பு மாணவி மா. ரிசிவர்த்தினி நன்றியுரை ஆற்றினார்.

Similar News