போதை ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்
மதுரை மது விலக்கு போலீசாரின் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.
மதுரை மாநகர மதுவிலக்கு அமலாக்க பிரிவு சார்பாக இன்று (ஜன.7)மதுரை, கோ.புதூர் EBG. மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி மற்றும் CSI கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ANTI DRUG CLUB மன்றங்கள் ஆரம்பிக்கப்பட்டு, மாணவ-மாணவியர்களுக்கு இடையே போதைப் பொருள்களினால் ஏற்படும் தீமைகள் பற்றியும் போதைக்கு பயன்படுத்தபடும் மாத்திரைகள் பற்றியும் போதைப் பொருள் புழக்கம் மற்றும் பழக்கம் பரவாமல் தடுக்க மாணவர்களால் காவல்துறைக்கு உதவ முடியும் என்பது பற்றியும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. இவ்விழாவில் பள்ளி மற்றும் கல்லூரி முதல்வர்கள், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினர், ஆசிரியர்கள், பேராசிரியர்கள், மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.