அரக்கோணம் அருகே ரயில் மோதி வாலிபர் பலி!

தண்டவாளத்தை கடக்கும் முயன்ற ரயில்வே ஊழியர் பலி

Update: 2025-01-07 15:02 GMT
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் கைனூர் ஊராட்சிக்குட்பட்ட மங்கம்மா பேட்டை ரயில்வே கேட் அருகில் இன்று ரயில் மோதி வாலிபர் ஒருவர் இறந்து கிடப்பதாக ரயில் போலீசாருக்கு தகவல் கிடைத்தது, ரயில்வே சப் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் நேரில் சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தியதில் புளியமங்கலம் கேங் மேன் தேவன் 31 என்பது தெரியவந்தது. மேலும் ரயில் மோதி இறந்தாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என விசாரித்து வருகின்றனர்.

Similar News