ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் தனியார் பள்ளி வளாகத்தில் இன்று பென்சிங் மேட்ச் நடைபெற்று கொண்டிருக்கிறது. இதில் 14 வயது, 17 வயது 19 வயது ஆண் பெண் பாலர்களுக்கும் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி நடைபெறுகிறது. இதில் மாவட்ட பென்சிங் அசோசியேசன் தலைவர் மற்றும் அரசு உடற்கல்வி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். மேலும் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் கோப்பைகளும் வழங்கப்பட்டது.