போதை விழிப்புணர்வு பேரணி

குமாரபாளையத்தில் எக்ஸெல் இயற்கை

Update: 2025-01-07 15:09 GMT
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சின்னப்பநாயக்கன்பாளையத்திலிருந்து பேருந்து நிலையம் காவல் நிலையம் வழியாக நகராட்சி அலுவலகம் வரை போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை எக்ஸெல் இயற்கை & யோகா கல்லூரி முதல்வர் மருத்துவர் மாலதி அவர்களும் தமிழ் சிந்தனைப் பேரவை தலைவர் எழுத்தாளர் ராகு வாழ்க ரமேஷ் குமார் அவர்களும் பச்சைக்கொடி அசைத்து தொடங்கி வைத்தனர். எக்ஸெல் இயற்கை & யோகா மருத்துவக் கல்லூரி கல்லூரி முதன்மை மருத்துவ அலுவலர் ராஜா சாலமன், துணை பேராசிரியர் மருத்துவர் செல்வி பவித்ரா, தமிழ் சிந்தனைப் பேரவை செயலாளர் கமல சேகரன், பொருளாளர் பரமன் பாண்டியன், நிர்வாகிகள் பைக் ராஜு, சமூக ஆர்வலர் மகாலிங்கம், ஊடகவியலாளர் சுந்தரராஜன், சிவசுப்பிரமணியன் ஆகியோர் பேரணியை வழிநடத்திச் சென்றனர். பேரணியில் போதைக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு மாணவ, மாணவியர் குரல் எழுப்பிச் சென்றனர். தொடர்ந்து பட்டத்தரசி அம்மன் கோவில் மண்டபத்தில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் குமாரபாளையம் ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் ஜி. கே. பிரபாகரன் அவர்கள் தலைமையில் காவல் உதவி ஆய்வாளர்கள் தங்க வடிவேல், நடராஜன் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. போதையற்ற தமிழ்ச் சமுதாயம் என்ற தலைப்பில் தமிழ் சிந்தனைப் பேரவை தலைவர் ராகு வாழ்க ரமேஷ் குமார் அவர்கள் விழிப்புணர்வு சொற்பொழிவு ஆற்றினார். காவல் உதவி ஆய்வாளர் தங்க வடிவேல் மற்றும் தலைமைக் காவலர் அங்கமுத்து அவர்களுக்கு தமிழ் சிந்தனைப் பேரவை சார்பில் சமூக விடிவெள்ளி என்ற விருதும், 210 நிமிடங்கள் பாடல் பாடி கின்னஸ் சாதனை புரிந்த சிவசுப்பிரமணியம் அவர்களுக்கு சமூக விடிவெள்ளி விருது தமிழ் சிந்தனைப் பேரவையால் வழங்கப்பட்டது. எக்ஸெல் கல்லூரி பேராசிரியர் சைமன் அவர்கள் நன்றி கூறினார்.

Similar News