போலி அரசு உத்தரவு கொடுத்து மோசடி

4 பேர் மீது வழக்கு

Update: 2025-01-07 15:14 GMT
குமரி மாவட்டம் பூதப்பாண்டியை அடுத்துள்ள திட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் முகமது ஆஸிக் (49) இவரது நண்பரான திடல் பகுதியை சேர்ந்த ராஜகோபால் (40) மற்றும் அவரது மனைவி சபிதா (36) இருவரும் சேர்ந்து முகமது ஆஸிக் என்பவரிடம், இவர்கள் உறவினர்கள் ஷெரின் சத்யராஜ், அவரது மனைவி மஞ்சு ஆகியேர்  ஊட்டியில் அரசு வேலையில் வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார் என அவரிடம் கூறி, முகமது ஆஷிக் பிள்ளைக்கு அரசு வேலை வாங்கலாம் என்று நம்பிக்கை வார்த்தைகூறி அவரிடமிருந்து 7.5 இலட்சம் ரூபாய் பெற்றுள்ளார்.        ஆனால் போலியான பணி  உத்தரவு கொடுத்து ஏமாற்றியதாக முகமது ஆஸிக் மாவட்ட கண்கானிப்பாளரிடம் கொடுத்த புகாரின் பேரில் பூதப்பாண்டி போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து நான்கு பேரையும் தேடி வருகிறார்கள்.

Similar News