ரேஷன் அரிசி கடத்த பயன்படுத்திய பறிமுதல் செய்த வாகனங்கள் ஏலம்
ரேஷன் அரிசி கடத்த பயன்படுத்திய பறிமுதல் செய்த வாகனங்கள் ஏலம்
திருப்பத்தூர் மாவட்டம் ஐயோ இந்த வாகனத்தை ஏலம் விடுறதுக்குள்ள நாங்க படும் பாடு இருக்கே முடியல! அதிகாரிகளின் மைண்ட் வாய்ஸ் திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த 20,21,22, ஆகிய மூன்று ஆண்டுகளில் சமூக விரோதிகளால் ரேஷன் அரிசி கடத்தப்பட்ட வாகனங்களை பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நிலையில் ப திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள முதல் தளத்தில் மாவட்ட வழங்கள் அலுவலர் சாந்தி தலைமையில் குடிமை பொருள் குற்ற புலனாய்வு காவல் ஆய்வாளர் முரளிதரன் முன்னிலையில் சுமார் 22 வாகனங்கள் ஏலத்திற்கு விடப்பட்டன. திருப்பத்தூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்து ஏலம் எடுக்க சுமார் 30க்கும் மேற்பட்டோர் ஏலத்தில் கலந்து கொண்டனர். அப்போது வாகனங்களின் விலையை அதிகாரிகள் அதிகமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தால் வாகனங்களை ஏலம் எடுக்க வந்தோர் மிகவும் தடுமாறினார் மேலும் ஏலம் விடத் தொடங்கியதில் இருந்து நிர்ணயிக்கப்பட்ட தொகையிலிருந்து 100 ரூபாய் 50 ரூபாய் என மட்டுமே ஏலத்தை சேர்த்து கேட்டதால் அதிகாரிகள் சோர்ந்து போயினர். மேலும் 100 ரூபாய் ஏலம் கேட்ட ஏலதாரர்களை அதிகாரிகள் சூப்பர் சூப்பர் என ஊக்குவிக்கும் சம்பவமும் அரங்கேறியது. மேலும் வாகனத்தை ஏலம் எடுக்க வந்தோர் இந்த இரும்பு கடைக்கு தான் போடணும் இத எடுத்து போய் நான் என்ன செய்ய எனவும் ஒருவரை ஒருவர் கேட்டுக்கொண்ட நிகழ்வும் அரங்கேறியது இதனால் 22 வாகனங்களை எப்போது ஏலம் விடப்போகிறோம் எப்படித்தான் இந்த வாகனங்களை அவங்க தலையில் கற்றது என்பது போல அதிகாரிகளின் மைண்ட் வாய்ஸ் இருந்தது. மேலும் ஏலத்தில் சுமார் எட்டு வாகனங்கள் மட்டும் ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 600 ரூபாய் மதிப்பில் எடுக்கப்பட்டது. மேலும் 14 வாகனங்கள் அதிக தொகை காரணமாக ஏலம் போகாமல் நின்றன. இந்த நிகழ்வில் வட்ட வழங்கல் அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.