ஆரணி கோட்டாட்சியர் அலுவலகத்தில் அனைத்து கட்சி கூட்டம்.
ஆரணி கோட்டாட்சியர் அலுவலகத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து அனைத்து கட்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.;
ஆரணி கோட்டாட்சியர் அலுவலகத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து அனைத்து கட்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சிறப்பு தீவிரவாக்கலர் பட்டியல் திருத்தம் முடிந்து வெள்ளிக்கிழமை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதனால் ஆரணி சட்டமன்றத் தொகுதி புதிய வாக்காளர் வரைவு பட்டியல் குறித்து ஆரணி கோட்டாட்சியர் சீ.சிவா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக சார்பில் நகர செயலாளர் அசோக்குமார் திமுக சார்பில் வழக்கறிஞர் ரமேஷ் பாஜக சார்பில் மாவட்ட பொதுச் செயலாளர் சதீஷ், விவசாய அணி மாவட்ட செயலாளர் குணாநிதி, காங்கிரஸ் கட்சி சார்பில் நகர மன்ற உறுப்பினர் ஜெயவேலு விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் நகரத் தலைவர் மோ.ரமேஷ், இளஞ்சிறுத்தை நிர்வாகி சார்லஸ், கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் சி.அப்பாசாமி, பெ.கண்ணன், தேமுதிக கட்சி சார்பில் மாவட்ட துணை செயலாளர் பாஸ்கரன், நகர செயலாளர் சுந்தர்ராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட வாக்காளர் வரைவு பட்டியலில் பெயர் ஏதாவது விடுபட்டிருந்தால் சேர்ப்பது குறித்தும், மேலும் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் சிறப்பு முகாமில் புதிய வாக்காளர்களை சேர்ப்பது குறித்தும், பெயர் நீக்கம் செய்ய வேண்டிய இருப்பின் குறித்தும் பேசினார். மேலும் அரசியல் கட்சியினர் கேட்ட சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார்.