வாஸன் கண் மருத்துவமனை மற்றும் ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம்..!

இம்முகாமில் 200க்கும் மேற்பட்ட ஸ்டார் ஹெல்த் ஊழியர்கள், முகவர்கள் அவர்களது குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.;

Update: 2025-12-20 17:53 GMT
பல ஆண்டுகளாக, வாஸன் கண் பராமரிப்பு நிறுவனம், இந்தியா முழுவதும் கண் மருத்துவத் துறையில் சிறந்து விளங்கும் ஒரு கலங்கரை விளக்கமாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது . உலகத்தரம் வாய்ந்த கண் பராமரிப்பு சேவைகளை வழங்குவதில் முழுமையான அர்ப்பணிப்புடன் , வாஸன் கண் மருத்துவத் துறையில் நம்பகத்தன்மை மற்றும் தரமான பராமரிப்புக்கு செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் வாஸன் கண் பராமரிப்பு மற்றும் ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் ஆகியவற்றுக்கு இடையேயான இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த ஒப்பந்தத்தின் படி கண் நோய்களுக்கான பணமில்லா சிகிச்சைக்காக ஒரு சிறப்பு அகில இந்திய பிணைப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அறிவிப்பின் முக்கிய அம்சங்கள் குறித்து நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் கூறியதாவது.‌.
நாடு முழுவதும் உள்ள ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிதாரர்களுக்குத் தடையற்ற, பணமில்லா கண் சிகிச்சையை வழங்குவது.பாலிசிதாரர்களுக்கு அதிக நன்மைகள் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட கண் சிகிச்சை சேவைகள் ஒரே கூரையின் கீழ் கிடைக்கும்.சிறப்பு சிகிச்சைகள், இந்த மருத்துவமனைகள் பின்வரும் நோய்களுக்கான விரிவான சிகிச்சையை வழங்குகின்றன கண்புரை, பார்வைக் குறைபாடு கிளௌகோமா,மாறு கண் சிகிச்சை, விழித்திரை,கண் புற்றுநோயியல், குழந்தைகளுக்கான கண் பராமரிப்பு,நீரிழிவு விழித்திரை நோய்,கார்னியா,விட்ரெக்டோமி, இன்ட்ராலேஸ், ஆப்டிகல், காண்டாக்ட் லென்ஸ் ஆகியவற்றிற்கு பயன் படுத்தி கொள்ளலாம்.இம்முகாமில் 200க்கும் மேற்பட்ட ஸ்டார் ஹெல்த் ஊழியர்கள், முகவர்கள் அவர்களது குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.இந்த நிகழ்ச்சியில் வாசன் கண் மருத்துவமனையின் மருத்துவர்கள் டாக்டர் சுகன்யா, டாக்டர் பிரீத்தி, ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் சார்பில் மண்டல மேலாளர் ஜெகதீசன், ஏரியா மேலாளர் பாலாஜி, வாஸன் கண் மருத்துவமனை ஊழியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Similar News