அரசு உதவி பெறும் பள்ளியில் சிசிடிவி, ஹார்ட் டிஸ்க் திருட்டு

மானாமதுரை அரசு உதவி பெறும் பள்ளியில் பூட்டை உடைத்து திருட்டு சம்பவம் நடைபெற்று உள்ளது;

Update: 2025-01-08 12:15 GMT
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பழைய பேருந்து நிலையம் அருகே அரசு உதவி பெறும் பள்ளி இயங்கி வருகிறது. நேற்று(ஜன.07) காலை பள்ளியை திறந்தபோது தலைமைஆசிரியர் அறை உட்பட 2 அறைகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டு இருந்தன. இந்நிலையில் பள்ளியின் தலைமை ஆசிரியர் கொடுத்த புகாரின் அடிப்படையில் மானாமதுரை டிஎஸ்பி நிரேஷ் தலைமையிலான போலீசார் பள்ளியை பார்வையிட்டனர். அங்கு சிசிடிவி கேமரா 'ஹார்டு டிஸ்க்' திருடுபோயிருந்தது. அதனைத் தொடர்ந்து இச்சம்பவம் குறித்து மானாமதுரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News