புளியங்குடியில் மோட்டார் சைக்கிள் தவறி விழுந்து வாலிபர் பலி
மோட்டார் சைக்கிள் தவறி விழுந்து வாலிபர் பலி
தென்காசி மாவட்டம் புளியங்குடி ரெங்க கருப்பன் தெருவை சேர்ந்தவர் சிவபெருமாள் மகன் சிவகுமார் (30) விவசாய கூலி தொழிலாளி. இவரது மனைவி மாரியம்மாள். தம்பதிக்கு குழந்தைகள் இல்லை. இந்நிலையில் நேற்றிரவு சிவகுமார், புளியங்குடி சங்கரன்கோவில் சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். சிந்தாமணி டோல்கேட் பகுதியில் வேகத்தடையில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து பைக் கவிழ்ந்தது. இதில் சிவகுமாருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதுகுறித்து அந்த பகுதி சமூக ஆர்வலர் திருமலைக்குமார் என்பவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். புளியங்குடி போலீசார் சம்பவ இடம் சென்று காயம் அடைந்தவரை மீட்டு புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி 2 அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை சிவகுமார் பரிதாபமாக 2 உயிரிழந்தார். இதுகுறித்து புளியங்குடி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.