இந்திய மாணவர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.

திருவாரூர் திருவிக அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் புதிய யுஜிசி அறிக்கையை கண்டித்து கல்லூரி முன்பு இந்திய மாணவர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2025-01-09 14:22 GMT
பல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமனத்திற்கான தேடுதல் குழுவுக்கான புதிய வழிகாட்டுதலை யுஜிசி- அண்மையில் வெளியிட்டது. மாநில கல்வி உரிமையை பறிக்கின்ற வகையில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பை யுஜிசி திரும்ப பெற வலியுறுத்தி திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள திரு.வி.க. அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவ, மாணவியர் இந்திய மாணவர் சங்கத்தின் கிளை தலைவர் செ. செல்வ பிரகாஷ் தலைமையில் 300-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் யுஜிசி அறிக்கையை திரும்ப பெற வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.

Similar News