அருப்புக்கோட்டையில் அதிமுக சார்பில் யார் அந்த சார் என்ற ஸ்டிக்கரை வாகனங்கள் ஒட்டும் பணி நடைபெற்றது
அருப்புக்கோட்டையில் அதிமுக சார்பில் யார் அந்த சார் என்ற ஸ்டிக்கரை வாகனங்கள் ஒட்டும் பணி நடைபெற்றது
அருப்புக்கோட்டையில் அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பில் முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் தலைமையில் சுமார் 300 வாகனங்களில் யார் அந்த சார் ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்ச்சி விருதுநகர் கிழக்கு மாவட்ட அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பில் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில் "யார் அந்த சார்" என்ற வாசகம் அடங்கிய ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அதிமுக முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜவர்மன், எதிர்கோட்டை சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கார் இருசக்கர வாகனங்கள் என 300-க்கும் மேற்பட்ட வாகனங்களில் யார் அந்த சார் என்ற ஸ்டிக்கரை ஒட்டினர்.