சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சார்பில் மாபெரும் பேரணி நடைபெற்றது..

சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சார்பில் மாபெரும் பேரணி நடைபெற்றது..

Update: 2025-01-09 14:12 GMT
விருதுநகரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சார்பில் மாபெரும் பேரணி நடைபெற்றது.. விருதுநகர் எம்ஜிஆர் சிலை அருகே சி பி எஸ் ஒழிப்பு இயக்கம் சார்பில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன் தலைமையில் திமுகவின் தேர்தல் வாக்குறுதி எண் 309 இன் படி புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், பணிக்கொடை வழங்க வேண்டும் குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் கலந்து கொண்ட மாபெரும் பேரணி நடைபெற்றது.. இந்த பேரணியில் கலந்து கொண்ட அரசு ஊழியர்கள் திமுக அரசுக்கு எதிராக பல்வேறு கோஷங்களை எழுப்பி தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர் மேலும் பொய்யான வாக்குறுதிகள் கொடுத்து திமுக தங்களை ஏமாற்றி விட்டதாகவும் அரசு ஊழியர்கள் வேதனை தெரிவித்தனர்..

Similar News