மூதாட்டிக்கு பாலியல் தொல்லை அளித்த முதியவா் வெட்டிக் கொலை
சிவகங்கை அருகே பாலியல் தொல்லை அளித்த முதியவரை வெட்டிக் கொலை செய்த மூதாட்டியை போலீசார் கைது செய்தனா்.
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை அருகே மாங்காட்டுப்பட்டியைச் சோ்ந்தவா் கருப்பையா(90). இவா் வீட்டின் அருகில் தமிழரசி(60) என்ற மூதாட்டி வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று வீட்டில் தனியாக இருந்த தமிழரசி(60), கருப்பையா(90) அவரது வீட்டுக்குள் நுழைந்து பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த தமிழரசி அருகில் இருந்த அரிவாளால் கருப்பையாவை வெட்டியுள்ளார். இதில் காயமடைந்த முதியவரை அருகிலிருந்தவா்கள் மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டு சென்றாா். ஆனால், அவா் வழியிலேயே உயிரிழந்தாா். இதுதொடா்பாக மதகுபட்டி காவல் போலீசார் வழக்குப் பதிவு செய்து தமிழரசியை கைது செய்தனா்.