ராமநாதபுரம் பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன
மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டியில் கமுதி மாணவர்கள் 16 பேர் முதலிடம் பெற்று வெற்றி பெற்றனர்.
தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் ராமநாதபுரத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான மாணவ, மாணவிகளுக்கான சிலம்பம் போட்டியில் மாவட்டம் முழுவதிலும் இருந்து அரசு, தனியார் பள்ளிகளில் இருந்து ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் 14, 17, 19 வயது என மூன்று பிரிவுகளாக போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் கமுதி விஜயபாண்டியன் சிலம்பம் பயிற்சி பள்ளி மாணவ மாணவிகள் 16 முதலிடமும், 2 பேர் இரண்டாம் இடம், 4 பேர் மூன்றாம் இடம் என மொத்தம் 22 பதக்கங்கள் பெற்று ராமநாதபுரம் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற சிலம்பம் பள்ளி என்ற பெருமையை பெற்றது. மேலும் வெற்றி பெற்ற மாணவர்களை ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதார்பாட்ஷா முத்துராமலிங்கம், கமுதி காவல் துணைக் கண்காணிப்பாளர் இளஞ்செழியன் ஆகியோர் மாணவர்கள், பயிற்சியாளர்கள் லெச்சுமணன், பாண்டி ஆகியோரை பாராட்டி, வாழ்கைக்கு தேவையான அறிவுரைகளை வழங்கினார்.