ராமநாதபுரம் வேளாண் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்
கமுதி அருகே உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் விதை சுத்திகரிப்பு நிலையத்தில் வேளாண் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள திம்மநாதபுரம் கிராமத்தில் செயல்பட்டு வரும் ராமநாதபுரம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் கீழ் செயல்படும் விதை சுத்திகரிப்பு நிலையத்தில் விதை உற்பத்தியாளர்களிடம் அதிக அளவு விதைநெல், உளுந்து மற்றும் கம்பு ஆகியவற்றை கொள்முதல் செய்து தரம் பிரித்து , ஆய்வுக்கு அனுப்பி, 2024 }25 க்கானசான்று அட்டை பொருத்தும் பணி நடைபெற இருப்பதால் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிக துறை துணை இயக்குனர் கோபாலகிருஷ்ணன், வேளாண் அலுவலர் உலகசுந்தரம், விதை சான்று உதவி இயக்குனர் சிவகாமி, விதைச்சான்று அலுவலர் சீராளன், உதவி விதை அலுவலர் பரமேஸ்வரன் மற்றும் உதவி வேளாண் அலுவலர் பிரியதர்ஷினி அகியோர் விதை சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள சுத்திகரிப்பு இயந்திரங்கள் மற்றும் எடை இயந்திரம், ஈரபதம் காட்டும் கருவிகள், எடைமேடை கட்டைகள் சேமிப்பு கிட்டங்கிகளை ஆய்வு செய்து தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்தனர். இந்த ஆய்வின் போது ராமநாதபுரம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் வடிவேல், இயக்குனர் கண்ணன், சந்தை மேலாளர் பிரியதர்ஷன் ஆகியோர் உடன் இருந்தனர்.