சட்டவிரோதமாக மதுபானம் கடத்தியவர் கைது
தொப்பூர் அருகே சட்டவிரோதமாக முப்பதுக்கும் மேற்பட்ட மது பாட்டில்கள் கடத்திய நபர் கைது காவலர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை
தர்மபுரி மாவட்டத்தில் மது பாட்டில்களை கடத்தி பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதை தடுக்க மது விலக்கு அமல் பிரிவு காவலர்கள் அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதன் ஒரு பகுதியாக நேற்று ஜனவரி 08 மாலை தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டத்துக்கு உட்பட்ட தொப்பூர் அருகே சோதனையில் ஈடுபட்டபோது மது பாட்டில்களை கடத்திய துரை என்பவரை கைது செய்தனர் அவரிடம் இருந்து 30க்கும் மேற்பட்ட மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்