ராமநாதபுரம் பொதுமக்களுக்கு காவல்துறை வேண்டுகோள்

கிராமப்புறங்களில் குற்றங்களை தடுக்க சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும், காவல்துறை வேண்டுகோள்

Update: 2025-01-09 02:48 GMT
ராமநாதபுரம் கிராமங்களில் குற்றங்களை தடுக்க சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும் என காவல்துறை சார்பில் கிராம தலைவர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சப்டுவிஷனில் சுமார் 6 காவல் நிலையங்கள் உள்ளன. இதில் 10 க்கும் மேற்பட்ட கரும்புள்ளி கிராமங்கள் உள்ளது. இந்த கிராமங்களில் அடிக்கடி ஜாதி பிரச்சனை உள்ளிட்ட சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படுவது வழக்கம். இதனை அதே போல் செப்டம்பர் 11ஆம் தேதி இமானுவேல் சேகரன் நினைவு தினம் மற்றும் அக்டோபர் 30ஆம் தேதி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை ஆகியவை நடைபெறும். பரமக்குடி சப்டிவிஷனுக்கு உட்பட்ட காவல் நிலையங்களுக்கு உட்பட்ட கிராம தலைவர்களுடன் இன்று காவல்துறை சார்பில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. பரமக்குடி தனியார் மகாலில் பரமக்குடி டிஎஸ்பி சபரிநாதன் தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. பரமக்குடி தாலுகாவிற்கு உட்பட்ட 100க்கும் மேற்பட்ட கிராம தலைவர்கள் கலந்து கொண்டனர். அப்போது சட்டம் ஒழுங்கு பிரச்சனை கிராமங்களில் அதிக அளவு ஏற்படுகிறது. அதனை தடுப்பதற்கு அனைத்து கிராமங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி காவல்துறைக்கு உதவ வேண்டுமென வேண்டுகோள் வைக்கப்பட்டது.

Similar News