எஸ் பி தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்

தர்மபுரி மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர்க்க முகாமில் 70 மனுக்களுக்கு உடனடி தீர்வு

Update: 2025-01-09 02:49 GMT
தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை நாட்களில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது ஏன நிலையில் ஜனவரி 8 நேற்று நடைபெற்ற குறைதீர்க்கும் முகாம் தர்மபுரி மாவட்ட எஸ்பி எஸ்எஸ்.மகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. இந்த முகாமில் தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 70 மனுதாரர்கள் வந்திருந்தனர். மனுக்களை நேரடியாக விசாரணை செய்து 70 மனுக்களுக்கும் உடனடியாக தீர்வும் காணப்பட்டது. மேலும் இந்த முகாமில் புதியதாக 28 மனுக்கள் பெறப்பட்டது. அவை விசாரணைக்காக சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது மேலும் இந்த முகாமில் துணை காவல் கண்காணிப்பாளர்கள் சிவராமன் கரிகால் பாரிசங்கர் மனோகரன் மகாலட்சுமி மற்றும் காவல் ஆய்வாளர்கள் வேலுதேவன் பார்த்திபன் புஷ்பராணி மற்றும் காவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Similar News