ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர்கள் ஆய்வு செய்தனர்
திருஉத்தரகோசமங்கை அருள்மிகு மங்களநாதசுவாமி திருக்கோயிலில் நடைபெறவுள்ள ஆருத்ரா தரிசனத் திருவிழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.சந்தீஷ்அவர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்
ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை வட்டம், திருஉத்தரகோசமங்கை அருள்மிகு மங்களநாதசுவாமி திருக்கோயிலில் நடைபெறவுள்ள ஆருத்ரா தரிசனத் திருவிழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ்அவர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், அவர்கள் திருஉத்தரகோசமங்கை அருள்மிகு மங்களநாதசுவாமி திருக்கோயில் வளாகத்தில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய செல்லும் வழிகளில் தடுப்புப் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டு வரும் பொதுமக்கள் சிரமமின்றி சுவாமி தரிசனம் செய்து சென்றிடும் வகையில் அமைத்திட வேண்டும் என அறிவுறுத்தினார். பின்னர் பொதுமக்கள் வாகனங்கள் நிறுத்துமிடம், பேருந்துகள் நிறுத்துமிடம் குறித்து பார்வையிட்டதுடன் குடிநீர் விநியோகிக்கும் இடம், தற்காலிக பொது கழிவறை அமையும் கூடாரங்கள், சாலை வசதி, மின்விளக்கு வசதி ஆகியவற்றை பார்வையிட்டதுடன் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் பொது மக்களின் தேவைக்கேற்ப உட் கட்டமைப்பு வசதிகளை பயன்படுத்திட வேண்டும். அதேபோல் கோயில் வளாகத்தில் தேவஸ்தானம் மூலம் உரிய உட்கட்டமைப்பு வசதிகளை செய்திட வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் அவர்கள் தெரிவித்தார். இந்த ஆய்வின்போது கீழக்கரை துணை காவல் கண்காணிப்பாளர் கதிர்லால் அவர்கள், மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் இராஜமனோகரன் அவர்கள், தேவஸ்தான மேலாளர் (திவான்) பழனிக்குமார் பாண்டியன் அவர்கள், வட்டாட்சியர் ஜமால் முகம்மது அவர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர் இராஜேஸ்வரி அவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.