காவேரிப்பாக்கத்தில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டும் பணி!

கட்டுமான பணிகளை ஆய்வு செய்து ஊராட்சி மன்ற தலைவர்

Update: 2025-01-09 05:04 GMT
காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கரிவேடு ஊராட்சியில் ஆர்.ஜி.எஸ்.ஏ. திட்டத்தில் ரூ.20 லட்சத்து 10 ஆயிரம் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்ட நிதி ரூ.10 லட்சம் என மொத்தம் ரூ.30 லட்சத்து 10 ஆயிரத்தில் புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை ஊராட்சி மன்ற தலைவர் சங்கீதா தாஸ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது ஒப்பந்த காலத்திற்குள் விரைவாகவும், தரமாகவும் பணிகளை முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர உள்ளதாக அவர் தெரிவித்தார்.

Similar News