பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணிகளை துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர்

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணிகளை துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர்

Update: 2025-01-09 09:34 GMT
தமிழக அரசு ஆண்டுதோறும் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கி வருகிறது. அதன்படி இந்த ஆண்டு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கரும்பு ஆகியவையும் விலையில்லா வேட்டி சேலை பொங்கல் பரிசாக வழங்கப்படும் என அறிவித்திருந்தது. இந்த பொங்கல் பரிசை குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நாமக்கல் மாவட்டகூட்டுறவுத்துறை சார்பில் திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க வளாகத்தில் நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள 958 நியாய விலைக் கடைகளை சேர்ந்த 5 லட்சத்து 40 ஆயிரத்து 33 குடும்ப அட்டைதாரர்களுக்கும் இன்று முதல் பொங்கல் பரிசு வழங்கப்பட உள்ளது. திருச்செங்கோட்டில் நடந்த நிகழ்ச்சியில் நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் உமா கலந்து கொண்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கினார். நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கத்தின் மேலாண்மை இயக்குனர் யசோதா தேவி வரவேற்று பேசினார். இணைப்பதிவாளர் அருள் அரசன் திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு, நகர மன்ற உறுப்பினர்கள் மகேஸ்வரி, புவனேஸ்வரி உலகநாதன், மனோன்மணி சரவண முருகன், புவனேஸ்வரி ரமேஷ், ராதா சேகர் சண்முகவடிவு, சினேகா ஹரிகரன், அசோக் குமார், அண்ணாமலை முருகேசன், ரமேஷ் ஆகியோர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.பரிசுத்த வகுப்புகளை வழங்கிய பின் செய்தியாளர் இடம் பேசிய நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா கூறியதாவது தமிழக மக்கள் பொங்கலை மகிழ்வுடன் கொண்டாடும் வகையில் தமிழக அரசு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கியுள்ளது அதனைஇன்று நாமக்கல் மாவட்டத்தின் சார்பில் இங்கு வழங்கி நிகழ்ச்சியை தொடக்கி வைத்துள்ளோம் பொதுமக்கள் கூட்டமாக சென்று அவதிப்படக்கூடாது என்பதற்காக டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளது அதன்படி பரிசுத்தொகுப்பை பற்றி ஜாதி மத பேதம் இன்றி பொங்கலை கொண்டாடி மகிழ வேண்டும் என பொதுமக்களை கேட்டுக்கொள்கிறேன் நாமக்கல் மாவட்டத்தை பொருத்தவரை நமது மாவட்டத்திலேயே கரும்பு கொள்முதல் முழுமையும் நடைபெற்று உள்ளது விவசாயம் சார்ந்த மாவட்டம் என்பதால் பொதுமக்களுக்கு வழங்க தேவையான அனைத்து கரும்புகளும் நமது மாவட்டத்திலேயே வாங்கப்பட்டுள்ளது பள்ளிபாளையம் குமாரபாளையம் பகுதிகளில் கந்துவட்டி கொடுமை அதிகமாக உள்ளது என்ற கேள்விக்கு இது தொடர்பாக வருவாய் கோட்டாட்சியர் டிஎஸ்பி உள்ளிட்ட அதிகாரிகள் கூட்டத்தை நடத்தி அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். மேலும் பெண்களுக்கு மகளிர் சுய உதவி குழு மூலமாகவும் பல்வேறு வங்கி திட்டங்கள் மூலமாகவும் கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது. எனவே பெண்கள் அதனை பயன்படுத்தி கடன் பெற வேண்டும் என்றும், அதிக வட்டி வசூலிப்பவர்களை இரும்பு கரம் கொண்டு ஒடுக்குவோம் என்றும் கூறினார். மைக்ரோ பைனான்ஸ் உள்ளிட்ட தனியார் நிதி நிறுவனங்களில் கடன் வாங்கி கட்ட முடியாமல் பொதுமக்கள் பரிதவிப்பதை கைவிட்டு மகளிர் சுய உதவி குழுக்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.நாமக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள ஐந்து லட்சத்து 40 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு இன்று முதல் வழங்கப்படுகிறது மாவட்டத்தில் திருச்செங்கோட்டில் தான் இந்த நிகழ்ச்சி துவங்கி வைக்கப்படுகிறது என கூறினார். தொடர்ந்து கூட்டப்பள்ளி பகுதியில் நகராட்சி சார்பில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைய உள்ள பகுதியை மாவட்ட ஆட்சியர் உமா ஆய்வு செய்தார். அங்கு செல்லும் வழியில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திய ஒரு கடைக்கு அபராதம் விதித்ததோடு அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாட்டை தடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். திருச்செங்கோடு பகுதியில் மட்டும் சுமார் 26 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு கூட்டுறவு சங்கங்கள் மூலம் பொங்கல் தொகுப்புகள் விநியோகம் செய்யப்பட உள்ளது.

Similar News