கல்லூரி மாணவ, மாணவிகளுடன் இணைந்து பொங்கல் வைத்து மகிழ்ந்த வெளிநாட்டினர்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் இயங்கி வரும் தனியார் கல்லூரியில் பத்தாம் ஆண்டு பொங்கல் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.;

Update: 2025-01-10 03:04 GMT
வகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் இயங்கி வரும் தனியார் கல்லூரியில் பத்தாம் ஆண்டு பொங்கல் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் பங்கேற்பதற்காக அமெரிக்கா, இத்தாலி, பிரான்ஸ், கனடா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து வந்திருந்தனர். கல்லூரி மாணவ, மாணவியர்கள் சார்பாக அவர்களுக்கு தாரை தப்பட்டை முழங்க கரகாட்டம், ஒயிலாட்டத்தோடு உற்சாக வரவேற்பு அளித்தனர். இதைத் தொடர்ந்து கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த இயற்கை குடிலில் பொங்கல் வைத்து வழிபட்டனர். இதையடுத்து பல்வேறு பாரம்பரிய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் கலை நற்கழ்ச்சிகள் நடைபெற்றன.

Similar News