தேவகோட்டை நகைக்கடையில் திருட்டு
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் நகை கடையில் மர்ம நபர்கள்
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையை சேர்ந்தவர் மணிவண்ணன்(36). இவர் அதேபகுதியில் நகைக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார் அதனைத் தொடர்ந்து இன்று காலை கடையை திறக்க வந்தபோது கடை உடைக்கப்பட்டது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இந்நிலையில் இதுகுறித்து தேவகோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த தேவகோட்டை போலீசார் திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.