ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்ட பொங்கல் விழா
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு வருவாய்த்துறையின் மூலம் பொங்கல் விழா நிகழ்ச்சி நடைபெற்றது
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு வருவாய்த்துறையின் மூலம் பொங்கல் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் அவர்கள் பங்கேற்று அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள் தெரிவித்தார். இவ்விழாவில் வருவாய்த்துறையின் மூலம் 100-க்கும் மேற்பட்ட அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பங்கு கொண்டு பொங்கல் விழா கொண்டாடினார்கள். அதேபோல் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் நடைபெற்ற பொங்கல் விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பங்கேற்று அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள் தெரிவித்தார்கள். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.கோவிந்தராஜலு அவர்கள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கல்யாணசுந்தரம் அவர்கள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பிரபாகர் அவர்கள், மாவட்ட வழங்கல் அலுவலர் இளங்கோவன் அவர்கள், வட்டாட்சியர் பழனிக்குமார் அவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள், பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.