சாலைப்பணியாளர் நூதனப் போராட்டம்
சிவகங்கை நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் அலுவலகம் முன் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கம் சார்பில் நூதனப் போராட்டம் நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் அலுவலகம் முன் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கம் சார்பில் நூதனப் போராட்டம் நடைபெற்றது. சாலைப்பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை அம்ல்படுத்த வேண்டும். தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் தமிழ்நாட்டில் 52 சுங்கச்சாவடிகளில் ஆண்டுக்கு ரூ.3,617 கோடி சுங்க வரி வசூல் கொள்ளையை தடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பணியாளர்கள் தலையில் கருப்புத்துணி முக்காடு அணிந்து ஒப்பாரியிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டத்தலைவர் மாரி தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச்செயலர் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்து பேசினார். மாவட்டச்செயலர் ராஜா கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.