ராமநாதபுரம் எஸ்டிபி கட்சியின் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது

2025-2027 ஆண்டுக்கான SDPI கட்சியின் ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்

Update: 2025-01-11 06:50 GMT
எஸ்டிபிஐ கட்சியின் ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் மாநிலச் செயலாளர் ஷபிக் அஹமது மற்றும் மாநில செயற்குழு உறுப்பினரும் மதுரை மண்டல செயலாளர் முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் முன்னிலையில் ராமநாதபுரம் தாஜ் திருமண மஹாலில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அடுத்த மூன்று ஆண்டுக்கான எஸ்டிபிஐ கட்சியின் இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாவட்டத் தலைவராக ரியாஸ் கான் தேர்ந்தெடுக்கப்பட்டார் மாவட்ட துணைத் தலைவர்களாக மௌலவி ஜஹாங்கீர் அரூஸி, மற்றும் டாக்டர் ஜெமீலுநிஷாBDS அவர்களும் மாவட்ட பொதுச்செயலாளராக பாம்பனை சேர்ந்த முகமது சுலைமான் அவர்களும் மாவட்ட அமைப்பு பொதுச்செயலாளராக ராமநாதபுரம் அப்துல் ஜமீல் அவர்களும் மாவட்டச் செயலாளர்களாக நம்புதலை அப்துல் மஜீத், ராமநாதபுரம் சகுபர் சாதிக் அவர்களும் மாவட்ட பொருளாளராக ஹசன் அலி அவர்களும் தேர்வு செய்யப்பட்டனர். மேலும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்களாக நவ்வர்ஷா, சோமு, ராஜ்குமார் ஆகியோர் மாவட்ட பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

Similar News