ஆசிரியர்களும், மாணவர்களும் கும்மியடித்து பொங்கல் விழா
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை அருகே ஆசிரியர்களும், மாணவர்களும் கும்மியடித்து பொங்கல் விழா கொண்டாடி மகிழ்ந்தனர்.
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை அருகே ஆசிரியர்களும் மாணவர்களும் கும்மியடித்து பொங்கல் விழா கொண்டாடி மகிழ்ந்தனர். சிவகங்கை அருகே சோழபுரத்தில் செயல்பட்டு வரும் தனியார் மேல்நிலைப்பள்ளியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மாணவ மாணவர்கள் படித்து வருகிறார்கள் என்ன நிலையில் உழவர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் விதமாக பள்ளி வளாகத்தில் மாணவர்களும் ஆசிரியர்களும் 25க்கும் மேற்பட்ட பானைகளில் பொங்கல் வைத்து வழிபட்டனர் பின்னர் மாணவர்களுடன் ஆசிரியர்கள் கும்மியடித்து விழாவை சிறப்பித்தனர் இவ்விழாவில் சிவகங்கை நகர் மன்ற தலைவர் துரை ஆனந்த், பள்ளி தாளாளர் முத்துகண்ணன், நல்லாசிரியர் கண்ணப்பன், பகிர்தநாச்சியப்பன் மற்றும் ஆசிரியர்கள் உட்பட ஏராளமான பள்ளி மாணவச் செல்வங்கள் கலந்து கொண்டனர்.