மாநில அளவிலான இளம் விஞ்ஞானிகள் போட்டி
மாநில அளவிலான இளம் விஞ்ஞானிகள் போட்டி
செங்கல்பட்டு மாவட்டம்,மேற்கு தாம்பரம் ஸ்ரீசாய்ராம் பொறியியல் கல்லூரி மற்றும் தமிழ்நாடு அறிவியல், தொழில்நுட்பக் கழகம் இணைந்து நடத்திய மாநில அளவிலான இளம் விஞ்ஞானிகள் போட்டி நடைபெற்றது. இதில் 6,000-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் 800 அறிவியல் தொழில்நுட்பம் சாா்ந்த கண்டுபிடிப்புகளைக் காட்சிப்படுத்தினா். போட்டியில் முதலிடம் பெற்ற குன்றத்தூா் பீஸ் ஆன் கிரீன் எா்த் பள்ளிக்கு முதல் பரிசாக ரூ. 50,000 மற்றும் ஒட்டுமொத்த சாம்பியன் சுழல் கோப்பை வழங்கப்பட்டது. 2-ஆவது இடத்தைப் பெற்ற வேலம்மாள் மெட்ரிக். பள்ளிக்கு ரூ. 25,000, 3-ஆவது இடத்தைப் பெற்ற மடிப்பாக்கம் சாய்ராம் வித்யாலயா பள்ளிக்கு ரூ. 15,000 வழங்கப்பட்டது. நிகழ்வில் இந்திய தரக்குழு தலைவா் மற்றும் உதவி இயக்குநா் ஜி.பவானி, திருவள்ளூா் மாவட்ட கல்வி அலுவலா் பி.ரவிச்சந்திரன், ஸ்ரீசாய்ராம் கல்விக் குழுமத் தலைவா் சாய் பிரகாஷ் லியோ முத்து, முதன்மை தொழில்நுட்ப அதிகாரி ஆா்.சதீஷ்குமாா், முதல்வா் ஜெ.ராஜா, இயக்குநா் கே.மாறன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.