பாரதியார் வேடம் அணிந்து பொங்கல் கொண்டாடிய மாணவர்கள்

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை அருகே உழவர் திருநாளை பாரதியார் வேடம் அணிந்து பொங்கல் வைத்து பள்ளி மாணவர்கள் கொண்டாடினார்கள்.

Update: 2025-01-11 12:38 GMT
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை அருகே உழவர் திருநாளை பாரதியார் வேடம் அணிந்து பொங்கல் வைத்து பள்ளி மாணவர்கள் கொண்டாடினார்கள். சிவகங்கை அருகே கண்டாங்கிபட்டியில் செயல்பட்டு வரும் தனியார் சிபிஎஸ்சி பள்ளியில் உழவர் திருநாளை போற்றும் விதமாக பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் பள்ளி மாணவர்கள் பாரதியார் வேடம் அணிந்தும், பாரதி பாடல்கள் பாடியும், தமிழ்ச் சொற்களால் உரையாற்றியும் விழாவை சிறப்பித்தனர். பள்ளியின் செயலர் பாலகார்த்திகேயன், ஆசிரியர்கள் மாணவர்கள் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்

Similar News