செங்கல்பட்டு அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் தேசிய தொழில் பழகுநா் முகாம்
செங்கல்பட்டு அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் தேசிய தொழில் பழகுநா் முகாம்
மத்திய, மாநில அரசு நிறுவனங்கள், தனியாா் நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்புகளைக் கொண்டு, பிரதமா் தேசிய தொழில் பழகுநா் முகாம் வரும் ஜன.20-ஆம் தேதி செங்கல்பட்டு அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் நடைபெற உள்ளது. இந்த முகாம் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற உள்ளது. முகாமில், தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) பயின்று, தோ்வில் தோ்ச்சி பெற்ற பல்வேறு தொழில் பிரிவைச் சாா்ந்த பயிற்சியாளா்கள் கலந்து கொண்டு, தொழில் பழகுநா் பயிற்சியில் இணைந்து, மத்திய அரசின் தேசிய பழகுநா் சான்றிதழ் பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. (என்ஏசி) சான்றிதழ் பெற்றவா்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமையும், வயது வரம்பில் சலுகையும் கிடைக்கும். எனவே, மாணவ, மாணவிகள் இந்த முகாமில் கல்விச் சான்றிதழ்களுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. கூடுதல் விவரங்களை அறிந்து கொள்ள செங்கல்பட்டு, மாவட்டத் திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குநரை நேரிலோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது 63790 90205, 044 - 27426554 ஆகிய தொலைபேசி எண்கள் மூலமாகவோ தொடா்பு கொண்டு உரிய விவரங்களைப் பெறலாம்.