போகி பண்டிகை குறித்து ஆட்சியர் முக்கிய அறிவிப்பு
போகி பண்டிகையின் போது பழைய பொருட்களை எரிப்பதை தவிர்த்து, காற்றின் தரத்தை பாதுகாக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டுமென தர்மபுரி ஆட்சியர் சாந்தி அறிவிப்பு
இதுகுறித்து தர்மபுரி ஆட்சியர் சாந்தி இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தமிழர் திருநாள் பொங்கலுக்கு முதல் நாள் போகிப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்தாளில் சில பழைய பொருட்களை எரிப்பது வழக்கம் கிழிந்த பாய்கள், பழைய துணிகள், தேவையற்ற விவசாய கழிவுகள் ஆகிய வற்றை தீயிட்டு கொளுத் கடை பிடிக்கப்படும் இப்பழக்கம் சுற்றுச்சூழலுக்கு பெருத்தி மையை ஏற்படுத்தாத ஒன்றாகும். ஆனால், தற்சமயம் போகியன்று மக்கள் நெருக்கம் மிகுந்த நகரங்களில் டயர், ரப்பர், பிளாஸ்டிக் மற்றும் செயற்கை பொருட்களை எரிப்பது வழக்கமாக உள்ளது. இதனால், நச்சுப் புகைமூட்டம் ஏற்பட்டு சுவாச நோய்கள், இருமல் மற்றும் நுரையீரல் மூக்கு எரிச்சல் உட்பட பல்வேறு பிரச்சனைகளால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். நச்சுப்புகை கலந்த பனி மூட்டத்தால் சாலை போக்குவரத்திற்கும் தடை ஏற்படுகிறது. இதுபோன்ற செயல்களை தடை செய்த உயர்நீதிமன்றம் பழையமரம் வறட்டி தவிர வேறு எதை யும் எரிப்பதற்கு தடை விதித் துள்ளது. மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கலாம் என அறிவுறுத்தி யுள்ளது எனவே, போகி பண்டிகையின் போது பழைய பொருட்கள் எரிப்பதை தவிர்த்து காற்றின் தரத்தை பாதுகாக்கபொதுமக்கள் ஒத் துழைக்குமாறும், பொங்கல் திருநாளை மகிழ்ச்சியுடனும், மாசில்லாமலும் கொண்டாடுவோம். இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.