கிராம ஊராட்சிகளுக்கு தனி அலுவலர் நியமனம்
சிவகங்கை மாவட்டம், கிராம ஊராட்சிகளின் உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிவுற்ற நிலையில், பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் தனி அலுவலர்களிடம் தெரிவிக்கலாம்
சிவகங்கை மாவட்டம், கிராம ஊராட்சிகளின் உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிவுற்ற நிலையில், பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் தொடர்பாக தனி அலுவலர்கள் /வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) அவர்களிடமோ அல்லது ஊராட்சி மணியின் “இலவச தொலைபேசி எண்ணான :155340” என்ற எண்ணிலோ தொடர்பு கொண்டு தீர்வு காணலாம் சிவகங்கை மாவட்டம், அனைத்து ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராம ஊராட்சிகளின் உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் பதவிக்காலம் 05-01-2025 உடன் முடிவடைந்ததைத் தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர் நிலையில் தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கிராம ஊராட்சிகளின் தேவைப்படும் அடிப்படை வசதிகளான சாலை வசதிகள், குடிநீர் வசதிகள், மின் விளக்கு வசதிகள் உள்ளிட்டவைகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட தனி அலுவலர் / வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) அவர்களிடமோ அல்லது ”ஊராட்சிமணி” இலவச தொலைபேசி எண்ணான:155340 என்ற எண்ணிலோ தொடர்பு கொண்டு தீர்வு காணலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.