நாமக்கல் : ஏகாம்பர ஈஸ்வரர் கோவிலில் சனி மகா பிரதோஷம் ! ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்!

பிரதோஷம் எந்த நாளில் வந்தாலும் சிறப்புதான் என்றாலும் சனிக்கிழமை வருவது பெரும் சிறப்பு. சனி பிரதோஷம் கோடி கோடி புண்ணியம் தரும். பிரதோஷ நாளில் சிவாலயத்தில் வலம் வந்து வணங்குவது மிக முக்கியமான வழிபாடாக கருதப்படுகிறது

Update: 2025-01-11 15:02 GMT
ஒவ்வொரு மாதமும் வரும் பிரதோஷ நாட்களில் பக்தர்கள் சிவன் கோவில்களுக்கு சென்று நந்தியம்பெருமான் மற்றும் சிவதரிசனம் செய்வது வழக்கம். அந்த வகையில், நாமக்கல் சுற்று வட்டார பகுதிகளில் இந்த வருடத்தின் முதல் சனி பிரதோஷத்தையொட்டி சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. பிரதோஷம் எந்த நாளில் வந்தாலும் சிறப்புதான் என்றாலும் சனிக்கிழமை வருவது பெரும் சிறப்பு. சனி பிரதோஷம் கோடி கோடி புண்ணியம் தரும். பிரதோஷ நாளில் சிவாலயத்தில் வலம் வந்து வணங்குவது மிக முக்கியமான வழிபாடாக கருதப்படுகிறது.
இதையொட்டி நாமக்கல் தட்டார தெருவில் அமைந்துள்ள ஏகாம்பர ஈஸ்வரர் காமாட்சி அம்மன் கோவில் சிவன் மற்றும் லிங்கத்திற்கு பால், இளநீர் உள்ளிட்ட பொருட்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது.நந்தீஸ்வரருக்கு பால், மஞ்சள், திரவியம் உள்ளிட்ட பல்வேறு பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டது
. பின்னா் பல்வேறு மலர்களால் மாலைகள் அணிவித்தும் தீபாராதனை நடைபெற்றது. நமச்சிவாயா என முழக்கமிட்டபடி பக்தா்கள், நந்தியையும், சிவனையும் வழிபட்டனா். சனி பிரதோஷத்தை முன்னிட்டு சிவன் உருவத்தை தத்ரூபமாக செய்து அதற்கு சந்தனக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Similar News