தாளவாடி அருகே கர்நாடக மது விற்ற முதியவர் கைது

தாளவாடி அருகே கர்நாடக மது விற்ற முதியவர் கைது

Update: 2025-01-12 04:22 GMT
தாளவாடி அருகே கர்நாடக மது விற்ற முதியவர் கைது ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி அருகே உள்ள தொட்டகாஞ்சனூர் அருகே உள்ள சூசைபுரம் பிரிவு பகுதியில் தாளவாடி போலீசார் நேற்று மாலை ரோந்து பணியில் ஈடுப்ட்டனர். அப்போது அங்குபையுடன் வந்த ஒருவர் போலீசாரை பார்த்ததும் பையை அங்கு வீசிவிட்டு தப்பி ஓடினார். பின்னர் அவர் வீசிவிட்டு சென்ற பையை போலீசார் எடுத்து சோதனை செய்தனர் அதில் 22 கர்நாடக மது பாக்கெட்டுகள் வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அவர் தொட்ட காஜனூர் கிராமத்தை சேர்ந்த மனோகரன் (வயது 50) என்பதும் அவர் கர்நாடக மது விற்றதும் தெரியவந்தது அதைத் தொடர்ந்து அவரை போலீ சார் வலைவீசி தேடி வருகின்றனர். இதேபோல் இக்களூர் கிராமத்தில் மரத்தடியில் நின்று கர்நாடக மது விற்றதாக ஆலு மாதா (70) என்பவரை போல் சார் கைது செய்தனர். அவரி டம் இருந்து 13 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Similar News

தீ விபத்து