ராமநாதபுரம் மனநல காப்பதில் பொங்கல் விழா கொண்டாட்டம்

செஞ்சோலை மனநலம் காப்பகத்தில் பொங்கலோ பொங்கல் என்று குலவை இட்டு ஆரவாரம் செய்து பொங்கல் விழா;

Update: 2025-01-13 03:44 GMT
ராமநாதபுரம் மாவட்டம் புத்தேந்தல் கிராமத்தில் அமைந்துள்ளது செஞ்சோலை மனநல காப்பகம் இங்கு தைப்பொங்கலை முன்னிட்டு காப்பக நிர்வாக இயக்குனர் நாகேஸ்வரன் தலைமையில் ஒருங்கிணைப்பாளர் காந்தாரி முன்னிலையில் பொங்கல் விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது இதில் பொங்கல் வைத்து பொங்கலோ பொங்கல் என்று குலவையிட்டு ஆரவாரம் செய்து பொங்கல் விழாவை மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழ்ந்தனர் மனநல காப்பகத்தில் அனைவரும் தை திருநாளாம் தமிழர் திருநாளை முன்னிட்டு புத்தாடை அணிந்து தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி பொங்கல் வைத்து ஆரவாரம் செய்து பொங்கல் விழாவை சிறப்பித்தனர் மனநலம் பாதிப்படைந்தவர்கள் இந்த நிகழ்வில் ஒன்று கூடி பொங்கல் வைத்து உணர்வுகளை வெளிப்படுத்தியது வரவேற்பை பெற்றது

Similar News