ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவிலில் எண்ணெய் காப்பு உற்சவத்தில் ஆறாம் திருநாளான இன்று மூக்குத்தி சேவை ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்.......*
ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவிலில் எண்ணெய் காப்பு உற்சவத்தில் ஆறாம் திருநாளான இன்று மூக்குத்தி சேவை ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்.......*
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவிலில் எண்ணெய் காப்பு உற்சவத்தில் ஆறாம் திருநாளான இன்று மூக்குத்தி சேவை ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்....... விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவிலில் மார்கழி மாத எண்ணைய் காப்பு உற்சவம் தொடங்கியது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவிலில் மார்கழி நீராட்டு உற்சவமான எண்ணைக்காப்பு உற்சவம் ஒவ்வொரு வருடமும் நடைபெறுவது வழக்கம்.ஸ்ரீ ஆண்டாள் நோன்பு நோற்று பூமாலை சூடி பின் பாமாலை பாடி இறைவனை அடைந்தார். ஸ்ரீஆண்டாள் நோன்பு நோற்ற காலமான இந்த மார்கழி மாதத்தில் 8 நாட்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் திருமுக்குளத்தில் உள்ள எண்ணைகாப்பு உற்சவம் மண்டபத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெறும். இந்நிலையில் இந்த வருடத்திற்கான எண்ணெய்காப்பு உற்சவம் நடைபெற்று வரும் நிலையில் ஆறாம் திருநாளான இன்று திருமுக்குளத்தில் உள்ள எண்ணெய் காப்பு சேவையில். தொடர்ந்து நடைபெற்ற எண்ணெய்க்காப்பு உற்சவத்தின் போது ஒரு நாட்டின் மகாராணிக்கு எவ்வித உபசாரங்கள் நடைபெறுகிறதோ அவை அனைத்தும் ஸ்ரீ ஆண்டாளுக்கு நடைபெறும். அதாவது காலையில் எழுந்து பல் துலக்குவது முதல் வெற்றிலை பாக்கு போட்டு வாய் சுத்தம் செய்வது, தலைக்கு எண்ணெய் சாற்றுவது உள்ளிட்ட அனைத்தையும் பட்டாச்சாரியார் ஸ்ரீ ஆண்டாளுக்கு செய்விப்பார் பின்பு நீராட்டு நடைபெறும். குறிப்பாக எண்ணெய்க்காப்பு உற்சவத்தின் போது ஸ்ரீ ஆண்டாளுக்கு சாட்டப்படும் எண்ணெயானது தாழம் பூ, மகிழம் பூ, வெட்டிவேர் உள்ளிட்ட மூலிகைகளால் தயார் செய்யப்பட்டு ஸ்ரீஆண்டாள் சாற்றுவது வழக்கம் தொடர்ந்து எட்டு நாட்கள் நடைபெறும் இந்த உற்சவத்தின் ஆறாம் திருநாளன்று கூடாரவல்லி என்ற நிகழ்ச்சி நடைபெறும். கவிச்சக்ரவர்த்தி கம்பர் ஒரு முறை ‘மார்கழி நீராடல்’ உற்சவத்தைக் காண ஸ்ரீவில்லிப்புத்தூருக்குக் கிளம்பினார். ஆனால், குறித்த நேரத்துக்குள் அவரால் திருமுக்குளத்துக்கு வந்து சேர இயலவில்லை. ‘நீராடல் வைபவத்தை தரிசிக்க முடியாதோ’ என்ற ஆதங்கத்துடன் உற்சவ மண்டபத்துக்கு வந்து சேர்ந்த கம்பருக்கு ஆச்சரியம் காத்திருந்தது.அதுவரை விழா ஆரம்பமாகவில்லை. காரணத்தை கம்பர் கேட்டபோது, ‘‘எண்ணெய்க் காப்பு நீராடல் முடிந்ததும், ஸ்ரீஆண்டாளுக்கு வைர மூக்குத்தி சேவை நடைபெறும்.அந்த மூக்குத்தியைக் காணோம்’’ என்று பதில் அளித்தனர் விழாக் குழுவினர். உடனே, கம்பர் தன் கையிலிருந்து மூக்குத்தி ஒன்றை எடுத்து அவர்களிடம் காட்டி, ‘‘இதுவா பாருங்கள்?’’ என்றார். எல்லோருக்கும் ஆச்சரியம். ‘ஸ்ரீஆண்டாளின் வைர மூக்குத்தி கம்பரிடம் எப்படி வந்தது?’ எனக் கேட்டனர். கம்பர், ‘‘திருமுக்குளம் கரை ஏறியபோது ஏதோ ஒன்று மின்னியதைக் கண்டு எடுத்து வந்தேன்!’’ என்றார். நீராடல் வைபவத்தைக் கம்பர் காண வேண்டும் என்பதற்காக ஸ்ரீஆண்டாள் நடத்திய திருவிளையாடலே இது என்று அனைவரும் உணர்ந்தனர். இதில் பிரசித்தி பெற்ற மூக்குத்தி சேவை நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. திருமுக்குளம் குளக்கரையில் அமைந்துள்ள எண்ணெய் காப்பு மண்டபத்தில் நடைபெற்ற மூக்குத்தி சேவை இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.