தமிழக அரசு ஒத்துழைப்பு தராததால் மதுரை- அருப்புக்கோட்டை- தூத்துக்குடி ரயில் பாதை திட்டம் ரத்து. செயல்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும் அருப்புக்கோட்டை பொதுமக்கள் கோரிக்கை

தமிழக அரசு ஒத்துழைப்பு தராததால் மதுரை- அருப்புக்கோட்டை- தூத்துக்குடி ரயில் பாதை திட்டம் ரத்து. செயல்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும் அருப்புக்கோட்டை பொதுமக்கள் கோரிக்கை

Update: 2025-01-13 09:32 GMT
தமிழக அரசு ஒத்துழைப்பு தராததால் மதுரை- அருப்புக்கோட்டை- தூத்துக்குடி ரயில் பாதை திட்டம் ரத்து. செயல்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும் அருப்புக்கோட்டை பொதுமக்கள் கோரிக்கை மதுரையிலிருந்து அருப்புக்கோட்டை மீளவிட்டான் வழியாக தூத்துக்குடிக்கு 143.5 கிமீ தொலைவுக்கு ரூ.1,875 கோடி மதிப்பில் புதிய அகல ரயில் பாதை அமைக்கும் பணிகள் கடந்த 2016-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டன. இதில் முதல்கட்டமாக மீளாவிட்டான் முதல் மேல்மருதூா் வரை 18 கி.மீ.க்கு ரூ.260 கோடி செலவில் ரயில் பாதை அமைக்கும் பணிகள் முடிவடைந்து சோதனை ஓட்டங்களும் வெற்றிகரமாக நிறைவடைந்தன. தொடா்ந்து, போதிய நிதி இல்லாத காரணத்தாலும், ரயில் பாதை அமைக்கத் தேவையான நிலத்தை கையகப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டதாலும், இத்திட்டம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது. இந்தத் திட்டத்தை மீண்டும் தொடங்க வேண்டும் என தென்மாவட்ட மக்கள் மற்றும் தமிழக அரசு சாா்பில் மத்திய அரசுக்கு பல்வேறு கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், இத்திட்டம் முழுமையாக கைவிடப்பட்டுவிட்டதாக சென்னையில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தாா். இத்திட்டத்தை வேண்டாம் எனக் கூறி தமிழக அரசிடமிருந்து எழுத்துபூா்வமான கடிதம் ரயில்வே துறைக்கு அனுப்பப்பட்டதாகவும். மாநில அரசின் ஒத்துழைப்பு இல்லாததால், இத்திட்டத்தை மத்திய அரசு முழுமையாக கைவிட்டு விட்டதாகவும் அவர் கூறியிருந்தார். இதற்கு அருப்புக்கோட்டை பகுதியைச் சார்ந்த பொதுமக்கள் தமிழக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் அருப்புக்கோட்டை மற்றும் விளாத்திகுளம் மதுரை சுற்றியுள்ள விவசாயிகள் இந்த ரயில் அமைக்கப்பெற்றால் பெரும் பயனடைப்பாளர்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த ரயில் தற்போது நிறுத்தப்பட்டதால் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் இது குறித்து அருப்புக்கோட்டை சார்ந்த விவசாயி அழகர்சாமி கூறுகையில் அருப்புக்கோட்டையை சுற்றியுள்ள வலையங்குளம் காரியாபட்டி கல்குறிச்சி ராமானுஜபுரம் செம்பட்டி போன்ற பல்வேறு கிராம முகூர்த்த மக்கள் மல்லிகை பூ மற்றும் மக்காச்சோளம் பயிரிட்டு வருவதாகவும் இந்த வழித்தடத்தில் சுமார் ஒரு லட்சம் ஏக்கர் விவசாய நிலத்தில் சுமார் லட்சக்கணக்கான விவசாயிகள் விவசாயம் செய்து வருவதாகவும் இந்த விவசாய விலை பொருட்களை விற்பனை செய்ய தூத்துக்குடி மதுரை செல்ல தனியா ட்ரான்ஸ்போர்ட் நிறுவனங்களை நாட வேண்டிய நிலை இருப்பதாகவும் இதனால் விவசாயிகளுக்கு உரிய லாபம் கிடைக்கப்பெறவில்லை எனவும் இது போன்ற ரயில் போக்குவரத்து கிடைத்தால் தங்களுக்கு அதிக லாபம் கிடைக்கும் என நம்பி வந்ததால் தமிழக அரசு அந்த ரயில் பாதை திட்டத்தை வேண்டாம் என மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாகவும் தமிழக அரசு இந்த அகல ரயில் பாதை திட்டத்தை மீண்டும் பரிசீலனை செய்து விவசாயிகளை நான் காக்க மீண்டும் கொண்டு வர வேண்டுமென விவசாயி அறிவித்தார் அதை தொடர்ந்து அந்த பகுதியைச் சேர்ந்த ரயில் பயணி ரமேஷ் என்பவர் பேசுகையில் இவர் அருப்புக்கோட்டை பகுதியில் 32 ஆண்டுகளாக குடியிருந்து வருவதாகவும் வியாபாரம் செய்து வரும் பல்வேறு பகுதிகளுக்கு பேருந்து இருசக்கர வாகனத்தில் சென்று வரும் இவர் அருப்புக்கோட்டையில் இருந்து தூத்துக்குடிக்கு மதுரைக்கு செல்ல ரயில் போக்குவரத்து இல்லாததால் பேருந்து போக்குவரத்தை பயன்படுத்தி வருவதாகவும் மதுரை டு தூத்துக்குடி ரயில்வே திட்டம் செயல்படுத்தப்பட்டால் அருப்புக்கோட்டை மக்கள் பெரிதும் பயன்பெறுவார்கள் எனவும் மத்திய அரசு கொண்டுவந்துள்ள நல்ல திட்டமான இந்த ரயில்வே திட்டத்தை தமிழக அரசு மறுப்பது வேதனை அளிப்பதாகவும் இந்த திட்டத்தை உரிய நடவடிக்கை எடுத்து தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.

Similar News