அதிமுக மாவட்ட எம்.ஜி.ஆர் மன்றம் சார்பில் தை எளிய மக்களுக்கும் மூத்த அதிமுக நிர்வாகிகளுக்கும் இரண்டு முழு கரும்பு, ரொக்க பணத்துடன் கூடிய பொங்கல் பரிசு வழங்கப்பட்டது

அதிமுக மாவட்ட எம்.ஜி.ஆர் மன்றம் சார்பில் தை பொங்கலை கொண்டாடும் விதமாக ஏழை எளிய மக்களுக்கும் மூத்த அதிமுக நிர்வாகிகளுக்கும் இரண்டு முழு கரும்பு, ரொக்க பணத்துடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது*

Update: 2025-01-13 09:36 GMT
அருப்புக்கோட்டையில் அதிமுக மாவட்ட எம்.ஜி.ஆர் மன்றம் சார்பில் தை பொங்கலை கொண்டாடும் விதமாக ஏழை எளிய மக்களுக்கும் மூத்த அதிமுக நிர்வாகிகளுக்கும் இரண்டு முழு கரும்பு, ரொக்க பணத்துடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நேரு நகரில் அதிமுக மாவட்ட எம்.ஜி.ஆர் மன்றம் சார்பில் ஏழை எளிய மக்களுக்கும் மூத்த அ.தி.மு.க நிர்வாகிகளுக்கும் தை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் சக்திவேல் பாண்டியன் ஏற்பாட்டில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக பொங்கல் வைக்கப்பட்டு எம்ஜிஆர் ஜெயலலிதா திருவுருவப்படங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று அதிமுக நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்கள் மற்றும் மூத்த அதிமுக நிர்வாகிகளுக்கு இரண்டு முழு கரும்பு, ரொக்க பணம், பச்சரிசி, வெல்லம், முந்திரி பருப்பு உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. இதில் அதிமுக கவுன்சிலர் ராமதிலகவதி, மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற நிர்வாகிகள், மாவட்ட நகர அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Similar News