பொங்கல் கரும்பு அமோகமாக வளர்ந்துள்ள நிலையில் அதை அறுவடை செய்து விற்பனைக்காக அனுப்பும் பணியில் விவசாயிகள் தீவிரம்*
பொங்கல் கரும்பு அமோகமாக வளர்ந்துள்ள நிலையில் அதை அறுவடை செய்து விற்பனைக்காக அனுப்பும் பணியில் விவசாயிகள் தீவிரம்*
அருப்புக்கோட்டை அருகே புலியூரான் கிராமத்தில் பொங்கல் கரும்பு அமோகமாக வளர்ந்துள்ள நிலையில் அதை அறுவடை செய்து விற்பனைக்காக அனுப்பும் பணியில் விவசாயிகள் தீவிரம் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே புலியூரான் கிராமத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருடம் தோறும் நூற்றுக்கணக்கான ஏக்கரில் பொங்கல் கரும்பு விவசாயம் செய்யப்படுகிறது. இந்நிலையில் இந்த வருடமும் கரும்பு விவசாயம் நடைபெற்று கரும்புகள் நன்கு வளர்ந்து காணப்படுகிறது. தற்போது பொங்கல் பண்டிகைக்கு இரு தினங்களே உள்ள கரும்புகள் அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். கரும்புகளை அறுவடை செய்து ஒவ்வொரு கட்டுகளாக அங்கேயே பிரித்து லாரியில் ஏற்றி அனுப்பி வைக்கின்றனர். இங்கிருந்து கொண்டு செல்லப்படும் கரும்புகள் மதுரை அருப்புக்கோட்டை விருதுநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகிறது. வியாபாரிகள் நேரடியாக புலியூரான் கிராமத்திற்கே வந்து கரும்புகளை கொள்முதல் செய்து செல்கின்றனர். சென்ற ஆண்டு கட்டு ஒன்று ரூபாய் 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இந்த ஆண்டு கட்டு ஒன்றுக்கு அதன் வளர்ச்சியை தகுந்தார் போல் ரூபாய் 300 முதல் 350 வரை விற்பனை செய்யப்படுகிறது. கரும்பு விளைச்சல் அமோகமாக உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.