ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட கைரேகைகளை வைத்து தேசியக்கொடி வண்ணத்தில் சுவாமி விவேகானந்தரின் உருவத்தை உருவாக்கி உலக சாதனை...*

ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட கைரேகைகளை வைத்து தேசியக்கொடி வண்ணத்தில் சுவாமி விவேகானந்தரின் உருவத்தை உருவாக்கி உலக சாதனை...*

Update: 2025-01-13 09:37 GMT
சுவாமி விவேகானந்தரின் 161 வது பிறந்த தினத்தை முன்னிட்டு விருதுநகரில் அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 400 மாணவிகள் 625 சதுர அடியில் சுமார் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட கைரேகைகளை வைத்து தேசியக்கொடி வண்ணத்தில் சுவாமி விவேகானந்தரின் உருவத்தை உருவாக்கி உலக சாதனை... இந்தியா முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினமான ஜனவரி 12 யை தேசிய இளைஞர் தினமாக கடைபிடிக்கப்பட்டு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதனை முன்னிட்டு தமிழக முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் ,சமூக ஆர்வலர்களும், பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளும்,அவருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். அதனை முன்னிட்டு இன்று விருதுநகரில் உள்ள அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வைத்து , சுவாமி விவேகானந்தர் 161 வது பிறந்த தினத்தை முன்னிட்டு பள்ளியில் பயிலும் சுமார் 400 மாணவிகள் பெரிய பாதாகையில் 625 சதுர அடியில் அவர்களின் கட்டை விரல் கை ரேகைகளின் மூலம் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட கைரேகைகளை வைத்து தேசியக்கொடி வண்ணத்தில் சுவாமி விவேகானந்தரின் திருஉருவப் படத்தை வடிவமைத்து விர்சு புக் ஆப் வேர்ல்ட் ரிக்கார்டு உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தனர். இதற்குரிய சான்றிதழ்களை வெர்சு புக் ஆப் வேர்ல்ட்ரிக்கார்டு நிர்வாகி சுந்தரமூர்த்தி, பள்ளி செயலாளர் சபரி மற்றும் தலைமை ஆசிரியை அமுதா அவர்களிடம் வழங்கினர்கள் மேலும் இந்த நிகழ்வின் போது பள்ளியின் உதவி செயலாளர் பாலமுருகன், பொருளாளர் முத்து, உபதலைவர் சங்கரதாஸ் உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு பள்ளி மாணவிகளை வெகுவாகப் பாராட்டினார்கள்

Similar News