திருச்செங்கோடு நகராட்சியில் சமத்துவ பொங்கல் கோலாகலம்
திருச்செங்கோடு நகராட்சியில் சமத்துவ பொங்கல் கோலாகலம்;
திருச்செங்கோடு நகராட்சி சார்பில் சமத்துவ பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது மும்மதங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர் சின்ன ஓங்காளியம்மன் கோவில் அருகில் இருந்து புது பானை கரும்புகள் சிலம்பாட்டம் ஒயிலாட்டம் கரகாட்டம் ஆகியவற்றுடன் ஊர்வலமாக நகராட்சிக்கு வந்து பொங்கல் வைத்து பொங்கல் திருவிழாவை சிறப்பாக கொண்டாடினார்கள் ஊர்வலத்திற்கு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு தலைமை வகித்தார் ஊர்வலத்தில் நகராட்சி பணியாளர்கள் தூய்மை பணியாளர்கள் நகர்மன்ற உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர் சிறப்பு அழைப்பாளர்களாக திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் மண்டல நகர அமைப்பு திட்ட குழு உறுப்பினர் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மதுரா செந்தில் ஆகியோர் கலந்து கொண்டனர். நகராட்சி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில்கோலப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு எம்எல்ஏ ஈஸ்வரன் மதுரா செந்தில் ஆகியோர் பரிசுகளை வழங்கினர் தொடர்ந்து நகர்மன்ற உறுப்பினர்கள் நகராட்சி பணியாளர்கள் தூய்மை பணியாளர்கள் இணைந்து கலந்து கொண்ட இசை நாற்காலி போட்டி கயிறு இழுக்கும் போட்டி ஆகியவை நடைபெற்றது.