தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், ஓரத்தநாடு கிளை சார்பில், சமத்துவப் பொங்கல் திருவிழா நடைபெற்றது. தம்பி அய்யா தலைமை வகித்தார். சாமி.சசிகுமார் வரவேற்றார். ஒரத்தநாடு காவல் ஆய்வாளர் சுதா, சிபிஎம் நகரச் செயலாளர் ஜான் பீட்டர், சிபிஎம் அ.வெங்கடேசன், திமுக நகரச் செயலாளர் கிருஷ்ணகுமார், பேரூராட்சி மன்ற உறுப்பினர் கமலக்கண்ணன், ஒரத்தநாடு பங்குத்தந்தை வில்லியம்ஸ், ஜமாத் தலைவர் அப்துல் காதர், நாட்டு குருக்கள் பி.ராஜரத்தினம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கம் அ.நாகராஜன் சிறப்புரையாற்றினார். பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தமுஎகச நிர்வாகிகள் சுனந்தா சுரேஷ், அருணாதேவி, கவிஞர் யாழன், கலா, கருணாநிதி, லெனின், அரவிந்தன், சக்திவேல், செந்தில்குமார், வசந்தகுமார் ஏற்பாடுகளை செய்திருந்தனர். செ.பெர்னாட்ஷா நன்றி கூறினார்.