மேலசிந்தலவாடி ரேஷன் கடை அருகே நின்றிருந்த வாலிபர் மீது வேகமாக வந்த டூவீலர் மோதி விபத்து.
மேலசிந்தலவாடி ரேஷன் கடை அருகே நின்றிருந்த வாலிபர் மீது வேகமாக வந்த டூவீலர் மோதி விபத்து.
மேலசிந்தலவாடி ரேஷன் கடை அருகே நின்றிருந்த வாலிபர் மீது வேகமாக வந்த டூவீலர் மோதி விபத்து. கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுக்கா, சிந்தலவாடி பகுதியைச் சேர்ந்தவர் சீராளன் மகன் விவேக் வயது 32. இவர் ஜனவரி 12ம் தேதி காலை 7 மணி அளவில், மேலசிந்தலவாடி பகுதியில் உள்ள ரேஷன் கடை அருகே நின்று கொண்டு இருந்தார். அப்போது அவ்வழியாக அரியலூர் மாவட்டம், திருமானூர், வடக்கு தெருவை சேர்ந்த பிரவீன் குமார் வயது 23 என்பவர் வேகமாக ஓட்டி வந்த டூ வீலர், நின்று கொண்டிருந்த விவேக் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பலத்த காயமடைந்த விவேக்கை மீட்டு, கரூரில் உள்ள ராஜ் ஆர்த்தோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். விபத்து குறித்து விவேக் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், டூவீலரை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய பிரவீன் குமார் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் லாலாபேட்டை காவல்துறையினர்.