ஜெயங்கொண்டம் ஆபத்து காத்த விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி

ஜெயங்கொண்டம் ஆபத்து காத்த விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி நடைபெற்றது.

Update: 2025-01-18 08:38 GMT
அரியலூர் ஜன.18- ஜெயங்கொண்டத்தில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு ஆபத்துகாத்த விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. கங்கைகொண்டசோழபுரம் கணக்க விநாயகர் கோவில் மற்றும் ஜெயங்கொண்டம் ஆபத்து காத்து விநாயகர் கோவில் ஆகிய கோவில்களில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு விநாயகருக்கு திரவிய பொடி, மாவு பொடி, மஞ்சள், சந்தனம், பால், தயிர், இளநீர் , பன்னீர் உள்ளிட்ட 21 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அருகம்புல் மற்றும் பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனையும் நடைபெற்றது. கணக்க விநாயகர் கோவில் நிகழ்ச்சியில் உட்கோட்டை, குருவாலப்பர்கோயில், சுண்ணாம்பு குழி, சம்போடை, குறுக்கு ரோடு, பள்ளிவிடை, பாகல்மேடு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் ஜெயங்கொண்டம் ஆபத்து காத்த விநாயகர் கோவிலில் மேல குடியிருப்பு சின்ன வளையும் செங்குந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Similar News