கூட்ஸ் ஓனர் அசோசியேசன் 5ம் ஆண்டு துவக்க விழா
எடப்பாடி மற்றும் சங்ககிரி தாலுகா ஹையர் கூட்ஸ் ஓனர் அசோசியேசன் 5ம் ஆண்டு துவக்க விழா எடப்பாடியில் நடைபெற்றது...;
சேலம் மாவட்டம் எடப்பாடியில் ஆடியோஸ் மற்றும் ஒளி ஆண்டு ஒலி அமைப்பாளர்கள், மேடை அமைப்பாளர்கள், கல்யாண ஸ்டோர்ஸ், ஜெனரேட்டர் வாடகை அமைப்பாளர்கள் ஆகியோரின் கூட்டமைப்பின் ஹையர் கூட்ஸ் ஓனர்ஸ் அசோசியேசன் 5ம் ஆண்டு துவக்க விழா எடப்பாடியில் தலைவர் மாரியப்பன் தலைமையில் நடைபெற்றது. இந்த துவக்க விழாவில் எடப்பாடி நகர் மன்ற தலைவர் பாஷா சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று அமைப்பாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்பித்தார். எடப்பாடி மற்றும் சங்ககிரி தாலுக்கா ஹையர் கூட்ஸ் ஓனர்ஸ் அசோசியேசன் செயலாளர் முத்துசாமி, பொருளாளர் பெரியசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.