விடுமுறை தினத்தில் சட்ட விரோதமாக மது விற்பனை குறித்த வீடியோ வைரல் காவல்துறை நடவடிக்கை

காங்கேயத்தில் விடுமுறை தினத்தில் சட்ட விரோதமாக மது விற்பனை குறித்த வீடியோ வைரல் காவல்துறை நடவடிக்கை

Update: 2025-01-18 08:18 GMT
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு 15 ஆம் தேதி தமிழ்நாடு அரசு அனைத்து மதுபான கடைகளுக்கும் விடுமுறை அறிவித்திருந்தது. ஆனால் காங்கேயம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அரசு மதுபான கடை அருகே சட்டத்துக்கு புறம்பாக அதிக விலைக்கு மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்டது குறித்து வீடியோ ஆதாரங்கள் சமூக வலைதளங்களில் பரவி வைரலானது. இதை அடுத்து காங்கேயம் தாராபுரம் சாலையில் உள்ள டாஸ்மாக் பாரில் பணிபுரியும் சுரேஷ் (வயது 35) என்பவர் 11 மது பாட்டில்கள் வைத்திருந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது

Similar News