காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா
சாணார்பட்டி காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா
திண்டுக்கல், சாணார்பட்டி காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா சார்பு ஆய்வாளர் பொன்.குணசேகரன் தலைமையில் நடைபெற்றது. காவலர்கள் அனைவரும் பாரம்பரிய உடை அணிந்து வந்து பொங்கல் விழா கொண்டாடினர். உழவர்களின் உற்ற நண்பனான காளையை காவல் நிலையம் அழைத்து வந்து தங்களது வணக்கத்தை தெரிவித்தனர்.